மறைந்த முப்படை தளபதிக்கு தேனி கூடலுாரில் மக்கள் அஞ்சலி

மறைந்த முப்படை தளபதிக்கு தேனி கூடலுாரில் மக்கள் அஞ்சலி
X
மறைந்த முப்படை தளபதி பிபின்ராவத்திற்கு, தேனி மாவட்டம் கூடலுாரில், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 
மறைந்த முப்படை தளபதி பிபின்ராவத்திற்கும், உடன் இறந்த ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்களுக்கும் கூடலுாரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நாட்டின் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத்திற்கு கூடலுாரில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தளபதியின் ஆத்மா, அவரது குடும்பத்தினர் மற்றும் உடன் இறந்த பிற ராணுவ அதிகாரிகள், ராணுவவீரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று, கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!