போடியில் கவுன்சிலர்கள் அனுமதியுடன் மரம் வெட்டப்பட்டதாக புகார்
போடியில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பாஸ்கரா திருமண மண்டப ரோட்டோரம் வளர்ந்திருக்கும் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து, கவுன்சிலர்கள், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் போடியி்ல் பாஸ்கரா திருமண மண்டபம் உள்ள தெரு உட்பட பல தெருக்களில் ரோட்டோரம் வளர்ந்திருக்கும் மரங்களை வெட்டி, மரப்பேட்டைக்கு கொண்டு செல்கின்றனர்.
கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மரம் வெட்டுவதே தவறு. அதுவும் கோடை காலம். கவுன்சிலர்கள் பதவியேற்றவுடன், அவர்களது சப்-போர்ட்டில் மரங்களை வெட்டி உள்ளனர் என கடும் புகார் எழுந்துள்ளது. போடி நகராட்சி நிர்வாகம் தான் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu