தொடரும் கிராமிய கலைஞர்கள் சோகம்..!

தொடரும் கிராமிய கலைஞர்கள் சோகம்..!
X
மனு கொடுக்க மேள தாள வாத்தியத்துடன் வந்து தங்களது வேதனையை வெளிபடுத்தினார்.

கோவில் திருவிழாக்களை கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும் என கிராமிய கலைஞர்கள் மேள தாளங்கள் முழங்கி ஊர்வலமாக வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமுல் படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் கோவில் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உத்தமபாளையம் தாலுகா கலைவாணி கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக நூற்றுக்கு மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் மதுரை சாலையில் இருந்து மேள தாள வாத்தியங்கள் முழங்கியவாறு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் கோவில் திருவிழாக்களை கட்டுப்பாட்டுடன் நடத்த அனுமதி வேண்டும், பொதுமக்கள் அதிக கூடும் கோவில் திருவிழாக்களை தவிர்த்து கிராமப் புறங்களில் உள்ள சிறிய கோவில்களில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும். மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரி கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மேள தாளங்கள் முழங்கி ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!