தேனி ரயில்வே கேட்டால் பழனிசெட்டிபட்டி வரை நெரிசல்

தேனி ரயில்வே கேட்டால் பழனிசெட்டிபட்டி வரை நெரிசல்
தேனியில் ரயில்வே கேட் மூடப்பட்டால் பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம் ரோடு பகுதி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரை- தேனி ரயில் வரும் போது, தேனி நகருக்குள் மட்டும் மூன்று இடங்களில் கேட் மூடப்படுகிறது. மூன்றுமே மிகவும் மிகவும் முக்கியமான நெரிசல் மிகுந்த ரோடுகள்.

குறிப்பாக பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தான் இந்த ரோடுகளை அதிகம் கடந்து செல்கின்றன. ரயில் ஆண்டிபட்டியை தாண்டியதும் இங்கு கேட் மூடப்படுகிறது. ஒருமுறை கேட் மூடப்பட்டால் குறைந்தபட்சம் பதினைந்து நிமிடம் கழித்தே திறக்கப்படுகிறது.

இந்த நேரத்திற்குள் பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம் ரோடுகள் வரை வாகனங்கள் நின்று விடுகின்றன. கேட் திறக்கப்பட்ட பின்னர் இந்த வாகனங்கள் கடந்து செல்ல இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. ஆக ஒருமுறை ரயில் வந்தால் குறைந்தபட்சம் முப்பத்தி ஐந்து நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வேறு மாற்றுப்பாதைகள் எதுவும் இல்லாத நிலையில், விரைவில் மேம்பாலங்கள் கட்டுவதே இப்பிரச்னைக்கு தீர்வாகும். குறைந்தபட்சம் மேம்பாலங்கள் கட்டி முடிக்க இரண்டு வருடங்கள் ஆகும். இன்னும் பணிகள் தொடங்க எத்தனை மாதங்கள் ஆகப்போகிறதோ?

ஆக ரயில் வதந்தை கொண்டாடும் வேளையில் இதனால் ஏற்படும் சிரமங்களையும் மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story