பண்டிகை நாளிலும் சகஜமாக இருந்த தேனி..!
பண்டிகை நாளிலும் சகஜமாக ஓடிய வாகனங்கள்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா ஊரடங்கு (சிறு, சிறு இடைவெளிகளுக்கு பின்னர்) சுமார் ஒண்ணரை ஆண்டுகள் வரை நீடித்தது. ஒண்ணரை ஆண்டுகள் வீட்டிற்குள் அடைந்து கிடந்த மக்கள் விடுமுறை சுகத்தை அனுபவிக்க தொடங்கி விட்டனரோ என எண்ணத்தோன்றியது.
காரணம், கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர், வரும் ஞாயிற்றுக்கிழமைகள், இதர விடுமுறை நாட்களிலும் ஒட்டுமொத்த நகர் பகுதியும் கொரோனா கால ஊரடங்கிற்கு இடையாக வெறிச்சோடி கிடந்தது. தேனி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதே நிலை தான் இருந்தது.
விடுமுறை என்றாலே அன்று ஒட்டுமொத்த தமிழக ரோடுகளும் வெறிச்சோடி கிடக்கும். இந்த நிலை கடந்த தீபாவளி வரை நீடித்தது. கடந்த தீபாவளி அன்றும் ஒட்டுமொத்த ரோடுகளும் வெறிச்சோடி கிடந்தன. இப்போது பொங்கல் திருவிழாவின் போது, இதே போன்று ரோடுகள் வெறிச்சோடி விடுமோ என நினைத்து, தேனியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் முதன் முறையாக தேனி நகரம் பொங்கல் அன்றும், மாட்டுப்பொங்கல் அன்றும் மிகவும் சகஜமாக இருந்தது. ரோடுகளில் வாகன போக்குவரத்து வழக்கம் போல் இருந்தது. குறிப்பாக சில சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நின்று வழிகாட்டும் அளவுக்கு போக்குவரத்து இருந்தது.
திறந்திருந்த ஓரிரு டீக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. அந்த கடைகளில் வழக்கத்தை விட மூன்று மடங்கிற்கு மேல் டீ, வடை, இதர ஸ்நாக்ஸ்கள் விற்பனை நடந்தது. நகரின் உள்பகுதி தெருக்களும் மிகவும், இந்த நிலை தேனியில் மட்டுமின்றி மட்டுமின்றி தேனி மாவட்டம் முழுவதும் காணப்பட்டது. குறிப்பாக பல இடங்களில் தெருக்களில் விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு நகர், கிராமப்பகுதிகள் கலகலவென இருந்தன.
தேனி மாவட்டம் மட்டுமின்றி, தென் மாவட்டங்களிலும் இதே நிலை தான் இருந்தது. கடந்த பொங்கல் விழாவின் போது கூட இப்படி ஒரு கலகலப்பு இருந்தது இல்லை. மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து நுாறு சதவீதம் விடுபட்டு விட்டனர் என்பதற்கு இதுவே சான்று என மக்கள் கருத்து தெரிவித்தனர். இனிமேல் அடுத்து வரும் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களும் திறக்கப்பட வாய்ப்புள்ளது என வணிகர்களும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu