பள்ளி பஸ் சென்ற ரோட்டில் இன்று டூ வீலர் செல்லக்கூட வழியில்லை..!

பள்ளி பஸ் சென்ற ரோட்டில் இன்று டூ வீலர் செல்லக்கூட வழியில்லை..!
X

தேனியில் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகவதியம்மன் கோயில் ேராட்டில் கடும் நெரிசல் நிலவுகிறது.

தேனி பகவதியம்மன் கோயில் ரோட்டில் டூ வீலர் கூட செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் நிலவுகிறது.

தேனியில் எடமால்தெரு, பகவதியம்மன் கோயில் தெருக்களில் முழுக்க வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள தனியார் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு இந்த ரோடுகளின் வழியாக பஸ்கள் சென்று வந்தன. இப்போது வணிக நிறுவனங்களின் பெருக்கம், இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்களின் முகப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக ரோடு சுருங்கிப்போனது.

இதனால் பள்ளி பஸ்கள் வேறு வழியாக சென்று வருகின்றன. இதனால் இந்த ரோடுகளில் மேலும் பல கடைகள் உருவாகி விட்டன. இருபுறங்களிலும் டூ வீலர் பார்க்கிங் செய்கின்றனர். இதனால் ரோட்டில் நடந்து செல்லக்கூட வழியில்லை. போலீசார் எவ்வளவு முயன்றும் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த ரோட்டை அகலப்படுத்தவும் வழியில்லை. பார்க்கிங்கை தவிர்க்கவும் வழியில்லை. ஆக்கிரமிப்பு அகற்றவும் வழியில்லை என பல்வேறு சிக்கல்கள் உருவாகி விட்டதால் பொதுக்கள் கடந்து செல்வதில் பெரும் பிரச்னை நிலவுகிறது.

தற்போது இந்த வணிக நிறுவனங்களில் ஏதாவது பொருட்கள் வாங்க செல்பவர்கள் கூட மிகவும் சிரமப்பட்டு செல்லும் நிலை உருவாகி உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் இணைந்்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் தேனியில் பஸ் சென்று வந்த தேனி பகவதியம்மன் கோயில் தெரு, இன்று நடக்க முடியாத அளவு சுருங்கி விட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!