சுருளி அருவியில் பக்தர்களை அனுமதிக்கோரி வியாபாரிகள் கலெக்டரிடம் முறையீடு

சுருளி அருவியில் பக்தர்களை அனுமதிக்கோரி  வியாபாரிகள் கலெக்டரிடம் முறையீடு
X

சுருளிஅருவி  பைல் படம்

சுருளி அருவியில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, தேனி கலெக்டரிடம் வியாபாரிகள் முறையீடு செய்தனர்.

தேனி மாவட்டத்தில், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். பக்தர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், அருவிகளுக்கு சென்று விட்டு, அதன் பின்னர் தான் சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஆனால் சுருளி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கால் பக்தர்களோ, பொதுமக்களோ குளிக்க கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது.

குளிக்க முடியாவிட்டால் சுருளிக்கு போய் என்ன பலன் என நினைக்கும் பக்தர்கள், நேரடியாக சபரிமலைக்கு செல்கின்றனர். இதனால் சுருளி சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பக்தர்கள் வந்தால்தான் எங்களுக்கு வியாபாரம் நடக்கும். எனவே பக்தர்கள் குளிக்க அனுமதியுங்கள் என, சுருளிஅருவியில் கடை போட்டிருக்கும் வியாபாரிகள் இன்று கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil