ஜன 3 திங்கள் முதல் சுருளி அருவியில் குளிக்கலாம்

ஜன 3 திங்கள் முதல் சுருளி அருவியில் குளிக்கலாம்
X

சுருளி அருவி படம்.

வரும் திங்கள் கிழமை முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஜனவரி 3ம் தேதி திங்கள் கிழமை முதல் குளிக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு இந்த தடை தற்போது விலக்கப்பட உள்ளது. வரும் ஜனவரி 3ம் தேதி திங்கள் கிழமை முதல் சுருளி அருவியில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் திங்கள் கிழமை முதல் வைகை அணை பூங்காவும் திறக்கப்படுகிறது. ஆனால் கும்பக்கரை, சின்னசுருளி அருவிகளில் குளிப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வனத்துறை சார்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story