பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி: 'சர்வர்கள்' முடக்கத்தால் விவசாயிகள் அவதி

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி: சர்வர்கள் முடக்கத்தால் விவசாயிகள் அவதி
X
பைல் படம்.
நெற் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியறுத்தி உள்ளனர்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற் பயிரை காப்பீடு செய்ய நாளை திங்கள் கிழமை (நவம்பர் 15ம் தேதி) கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் சர்வர்கள் முழுமையாக முடங்கி உள்ளன. மாவட்டத்தில் எங்குமே பயிர்காப்பீடு பிரிமியம் செலுத்தி ரசீது பெற முடியவில்லை. ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

எனவே காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு