டிவிஎஸ் சீமா கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

டிவிஎஸ் சீமா கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
X

பைல் படம்

டிவிஎஸ் சீமா கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற 07.07.2024ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழக பொறியியல் துறை மாணவா்களுக்காக ரூ.100 கோடி நிதியில் ‘தி டிவிஎஸ் சீமா ஸ்காலா்ஷிப்’ (The TVS Cheema Scholarship) எனும் பெயரில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் செயல்படுத்திவருகிறது.

இதன்மூலம், ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் துறையில் தொழில்முறை பட்டப்படிப்புகள் படிக்கும் சுமார் 500 மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

குறிப்பாக, பொறியியல் துறையில் ரோபோட்டிக்ஸ் மற்றும் இயந்திரவியல் பயிலும் மாணவா்களுக்கு அவா்களின் பாடத் திட்டம் நிறைவடையும் காலம் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

‘சீமா’ என்று அழைக்கப்பட்ட டி.எஸ். ஸ்ரீனிவாசன், பட்டப்படிப்பு, கல்வி எதுவுமின்றி தாமாகவே இயந்திரப் பொறியாளராக வெற்றி கண்டவா். எனவே, இந்த உதவித்தொகை திட்டம் அவருக்கு மிகப்பொருத்தமான அஞ்சலியாக இருப்பதுடன், தகுதியான மாணவா்களின் திறமைகளை வளா்த்தெடுத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது. இதன் மூலம் இந்த உதவித்தொகை அங்கு படிக்கும் திறமை வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.

இந்த நிதி, தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. தோ்வுக் குழு விதிமுறைகளின்படி நடைபெறும் தோ்வில் தோ்ச்சிபெறும் மாணவா்கள் மட்டுமே உதவித் தொகை பெறத் தகுதியானவராக தோ்ந்தெடுக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள்:

TVS Engineering Degree Scholarship 2024

TVS Diploma Scholarship 2024

இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு:

http://www.tvscsf.com

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!