தேனி மார்க்கெட்டில் ரூ.50க்கும் கீழே வந்தது தக்காளி விலை

தேனி மார்க்கெட்டில் ரூ.50க்கும்  கீழே வந்தது தக்காளி விலை
X

தேனி உழவர்சந்தை பைல் படம்.

தேனி உழவர்சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை கிலோ ரூ.50க்கும் கீழே வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

மூன்று மாதங்களாக விலையில் உச்சம் பெற்றிருந்த தக்காளி இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே குறைய தொடங்கியது. படிப்படியாக குறைந்து இன்று கிலோ 50க்கு வந்தது. முதல்ரகத்தின் விலை தான் கிலோ 50. இரண்டாம் ரகம், மூன்றாம் ரகத்தின் விலை அதற்கும் கீழே இறங்கி விட்டது.

இந்நிலை நீடித்தால் தக்காளி மீண்டும் பழையபடி யாரும் கண்டுகொள்ளாத நிலைக்கு வந்து விடும். அதாவது கிலோ 15 ரூபாய்க்கு கீழே வந்து விடும். மழை இல்லாததால் விளைச்சல் அதிகரித்து, வரத்து உயர்ந்ததே இதற்கு காரணம். தக்காளியை பொறுத்தவரை மழை பெய்தால் செடியிலேயே அழுகி விடும். எனவே மழை பெய்தால் விலை கூடும். தற்போது வெயில் கடுமையாக இருப்பதால், விளைச்சல் அதிகரித்ததே வரத்து உயர்ந்து விலை குறைய காரணம்.

இதேபோல் சின்னவெங்காயத்தின் விலையும், கிலோ 60க்கும் கீழே வந்து விட்டது. இதேபோல் அனைத்து வகை காய்கறிகளின் விலைகளும் குறைந்து விட்டன. ஆகஸ்ட் 10ம் தேதியான இன்று தேனி உழவர்சந்தை விலை நிலவரம் கிலோவிற்கு ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தரிக்காய்- 30, வெண்டைக்காய்- 20, கொத்தவரங்காய்- 20, சுரைக்காய்- 15, புடலங்காய்- 20, பாகற்காய்- 25, பீர்க்கங்காய்- 36, முருங்கைக்காய்- 20, பூசணிக்காய்- 30, பச்சைமிளகாய்- 40, செடி அவரை- 30, உருளைக்கிழங்கு- 45, கருணைக்கிழங்கு- 60, சேப்பங்கிழங்கு- 60, கருவேப்பிலை- 32, கொத்துமல்லி- 18, புதினா- 35, பெல்லாரி- 28, இஞ்சி- 230, வெள்ளைப்பூண்டு- 240, பீட்ரூட்- 30, நுால்கோல்- 30, முள்ளங்கி- 22, முருங்கை பீன்ஸ்- 68, பட்டர்பீன்ஸ்- 135, சோயாபீன்ஸ்- 115, முட்டைக்கோஸ்- 30, காரட்- 53, டர்னிப்- 30, சவ்சவ்- 20, காலிபிளவர்- 20, சேம்பு-- 48, கீரை வகைகள்- 25.

Tags

Next Story