தேனி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

தேனி மாவட்டத்தில் தக்காளி  விலை தொடர்ந்து உயர்வு
X
தேனி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் விலை குறைய வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகளவில் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் செடிகள் அழிந்து போயின. இதனால் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது. தற்போது சில்லரை மார்க்கெட்டில் கிலோ 70 ரூபாயினை கடந்துள்ளது.

இனி வைகாசி மாதம் பிறக்க உள்ள நிலையில், முகூர்ந்தங்கள் அதிகரிக்கும். எனவே தேவை தொடர்ந்து அதிகரிப்பதால் விலை இன்னும் உயரவே வாய்ப்புகள் அதிகம். தற்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகும் சின்னவெங்காயம் விலையும் விரைவில் அதிகரிக்கும். அனைத்து காய்கறிகளின் விலைகளும் சிறிதளவு உயர வாய்ப்புகள் உள்ளது என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture