மீண்டும் ரூ.100ஐ தொட்ட தக்காளி விலை: சின்னவெங்காயம் கிலோ ரூ.150
பைல் படம்.
கடந்த ஒரு வருடமாகவே சின்னவெங்காயம் விலை சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் சின்னவெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஓரளவு வருவாய் கிடைத்தது. உண்மை தான் விவசாயிகளுக்கு ஓரளவு தான் வருவாய் கிடைத்தது. வியாபாரிகள் தான் விலை உயர்வின் முழுப்பலனை அனுபவித்தனர்.
கடந்த ஐந்து நாட்களாக பெய்த மழையால் சின்னவெங்காயம் அறுவடை பாதிக்கப்பட்டது. தக்காளி அறுவடையும் பாதிக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டில் வரத்து மிக, மிக குறைந்தது. இன்று தேனி சில்லரை மார்க்கெட்டில், அதாவது பலசரக்கு கடைகளி்ல் 100 கிராம், கால் கிலோ என வாங்குபவர்களுக்கு விலை கிலோ 150 என நிர்ணயித்து விற்பனை செய்தனர். அதாவது 100 கிராம் சின்னவெங்காயம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஒரு கிலோ வாங்குபவர்களுக்கு கிலோவிற்கு 10 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. ஆனால் தேனி உழவர்சந்தையில் சின்னவெங்காயம் கிலோ 120 ரூபாய் என விற்கப்பட்டது. தக்காளி விலை சில்லரை மார்க்கெட்டில் கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உழவர்சந்தை விலையும் கிலோ நுாறு ரூபாய் என விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து உழவர்சந்தையில் கிலோ 83 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெளிமார்க்கெட் விலை நுாறு ரூபாயினை தொட்டது. பரவலாக அனைத்து காய்கறிகளின் விலைகளும் ஓரளவு உயர்ந்து தான் இருந்தது.
தேனி உழவர்சந்தையில் சிலகாய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெண்டைக்காய்- 40, கொத்தவரங்காய்- 30, பாகற்காய்- 48, பீர்க்கங்காய்- 48, முருங்கைக்காய்- 45, பச்சைமிளகாய் (உருட்டு) - 110, அவரைக்காய்- 50, சேப்பங்கிழங்கு- 65, உருளைக்கிழங்கு - 26, இஞ்சி- 260, வெள்ளைப்பூண்டு- 280, பீட்ரூட்- 35, நுால்கோல்- 55, முருங்கை பீன்ஸ்- 100, பட்டர்பீன்ஸ்- 120, டர்னிப்- 45, காலிபிளவர்- 35 என விற்கப்பட்டது. கீரை வகைகள் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில்லரை மார்க்கெட்டில் சராசரியாக இதன் விலைகள் உழவர்சந்தை விலையில் இருந்து கிலோவிற்கு 20 சதவீதம் வரை அதிகரித்து விற்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu