தேனியில் தக்காளி விலை சரிவு: கிலோ ரூ.50க்கு விற்பனை

தேனியில் தக்காளி விலை சரிவு: கிலோ ரூ.50க்கு விற்பனை
X

பைல் படம்.

தேனியில் தக்காளி விலை இன்று மீண்டும் 50 ரூபாய் என குறைந்தது. சின்ன வெங்காயம் மெல்ல, மெல்ல விலை உயர்ந்து வருகிறது.

தேனி மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ தக்காளி 100 ரூபாயினை எட்டியது. முகூர்த்த காலங்களில் 120ஐ கூட தொட்டது. பின்னர் வரத்து அதிகரிப்பால் மெல்ல, மெல்ல விலை குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி கிலோ தக்காளி 50 ரூபாய் என விற்கப்பட்டது. அதேபோல் சின்ன வெங்காயம் கிலோ முதல்ரகம் 20 ரூபாய் என்று இருந்தது.

இதனால் விவசாயிகள் விலை கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதன் விலை சற்று மெல்ல உயர்ந்து கிலோ 30 ரூபாயினை தொட்டுள்ளது. மற்ற அனைத்து காய்கறிகளின் விலைகளும் வழக்கத்தை விட சற்று அ்திகமாகவே உள்ளன. இன்று தேனி உழவர் சந்தை விலை நிலவம்: ஒரு கிலோவிற்கு கத்தரிக்காய்- 30, வெண்டைக்காய்- 44, சுரைக்காய்- 15, புடலங்காய்- 30, பாகற்காய்- 52, முருங்கைக்காய்- 65, பூசணிக்காய்- 16, பச்சைமிளகாய்- 32, அவரைக்காய்- 80, உருளைக்கிழங்கு- 30, கருணைக்கிழங்கு- 22, சேப்பங்கிழங்கு- 28, கொத்தமல்லி- 75, புதினா- 35, பெல்லாரி- 22, இஞ்சி- 42, பூண்டு - 160, வாழை இலை- 20, வாழைப்பூ- 10, வாழைத்தண்டு- 10, பீட்ரூட்- 32, நுால்கோல்- 60, முள்ளங்கி- 15, முருங்கை பீன்ஸ்- 75, பட்டர்பீன்ஸ்- 115, சோயாபீன்ஸ்- 90, முட்டைக்கோஸ்- 26, காரட்- 26, டர்னிப்- 40, சவ்சவ்- 20, காலிபிளவர்- 30.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா