தேனி மாவட்டத்தில் மீண்டும் செஞ்சுரி போட்டது தக்காளி விலை

தேனி மாவட்டத்தில் மீண்டும் செஞ்சுரி போட்டது தக்காளி விலை
X
தேனி சில்லரை மார்க்கெட்டில் மீண்டும் தக்காளி விலை கிலோ நுாறு ரூபாயினை எட்டி உள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை வடகிழக்கு பருவமழை வெளுத்துக் கட்டியதால், தக்காளி விலை கிலோ 140 ரூபாய் வரை விற்கப்பட்டது. எனினும், படிப்படியாக இதன் விலை குறைந்து கிலோ 40 ரூபாய்க்கும் கீழ் வந்தது. இந்த நிலையில், மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் விலை உயர்ந்தது; இன்று சில்லரை மார்க்கெட்டில் கிலோ 100 ரூபாயினை தொட்டது.

இது குறித்து வியாபாரிகளிடம் கேட்ட போது, 'தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தக்காளி விளைச்சல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு தினசரி வரத்து குறைந்துள்ளது. பெங்களூரு தக்காளி வரத்தும் இரண்டு நாட்களாக இல்லை. இதனால் தேவை அதிகரித்து, பற்றாக்குறை ஏற்பட்டதால், உள்ளூர் தக்காளி கிலோ 100 ரூபாயினை எட்டி உள்ளது' என்றனர்.

அதேபோல் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய், பச்சைமிளகாய், அவரைக்காய், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பெல்லாரி, வெள்ளைப்பூண்டு, முருங்கை பீன்ஸ், பட்டர்பீன்ஸ், சோயாபீன்ஸ், உள்ளிட்ட பல காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil