பெரியகுளம் அருகே விநாயகர் கோயிலுக்கு பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு
மதுராபுரி விநாயகர் கோயிலுக்கு பாதுகாப்பு கேட்டு இந்து எழுச்சி முன்னணியினரும் பொதுமக்களும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மதுராபுரி கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இருந்து எங்க ஊரில் வசிக்கும் (1)நாயக்கர் சமுதாயம் (2)நாயுடு சமுதாயம் (3)செட்டியார் சமுதாயம் (4)ரெட்டியார் சமுதாயம் (5)ஆசாரி சமுதாயம் (6)பிள்ளைமார் சமுதாயம் (7)கவுண்டர் சமுதாயம் (8)தேவர் சமுதாயம் ஆகிய சமூகத்தார்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வருடம் தோறும் தமிழ் சித்திரை மாதம் விழா எடுப்பது பல ஆண்டுகாலம் வழக்கத்தில் இருந்து வருகிறது மேற்படி கோவில் நிலமானது பட்டாநிலத்தில் உள்ளது/
இந்த கோயில் அருகில் குடியிருந்து வரும் ஓய்வுபெற்ற மின்சார ஊழியர் சுப்புராஜ் (வயது75 )கோயிலுக்கு மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த கிழக்கு பாதையை அடைத்து வைத்துக்கொண்டு கோவில் முன் பக்கம் வாசலை திறந்து கேட் வைத்துக்கொண்டு பொய்யான தகவலை எழுதி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்திருக்கிறார். அந்த மனுவின் அடிப்படையில் வடபுதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் நேரில் வந்து விசாரணை செய்தார். நடந்த விஷயங்களை எடுத்துச் சொன்னோம். அவரும் கேட்டறிந்து கொண்டார் பஞ்சாயத்து தலைவர் எவ்வளவோ சுப்புராஜிடம் எடுத்துச் சொல்லியும் சமாதானமாக ஆகாமல் கோவிலை இடிக்காமல் விடமாட்டேன் என்று பேசி வருகிறார்.
இதனால் அமைதியாக வாழ்ந்து வரும் மதுராபுரியில் பொதுமக்களிடையே குழப்ப வந்து விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் மிகவும் நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராம மூர்த்தி, தேனிநகர செயலாளர் அரண்மனை முத்துராஜ், பெரியகுளம் நகர தலைவர் பட்டர் கோகுல் மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் அலுவலக வாசலில் விநாயகர் கோயிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu