முதியவரை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

Murder Case | Theni News Today
X

தேனி மாவட்ட நீதிமன்றம் பைல் படம்.

Murder Case- டூ வீலர் நிறுத்தும் தகராறில் முதியவரை கொலை செய்த வருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீ்ர்ப்பளித்தது.

Murder Case- தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் காராமணி (வயது63.) இவர் 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ரோட்டில் டூ வீலரை குறுக்கே நிறுத்தியிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த அய்யாத்துரை, (73 )கண்டித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. காராமணி தாக்கியதில் அய்யாத்துரை இறந்தார். ராயப்பன்பட்டி போலீசார் காராமணியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா குற்றம் சாட்டப்பட்ட காராமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!