/* */

40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட மண்ணின் காதலன் செல்வகுமார்

thousand saplings plant Selvakumar is the lover of the soil

HIGHLIGHTS

40 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட மண்ணின் காதலன் செல்வகுமார்
X

மரங்களின் காதலர் செல்வக்குமார்.

ஆள் உயர பச்சை அங்கியில் 70 பைகள் தைக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் பாதி அளவுக்கு மண் இருக்கிறது. மண்ணில் விதவிதமான செடிகள். கிட்டதட்ட 150 கிலோ எடை இருக்கும். அதை உடலில் சுமந்துகொண்டு ஊர் ஊராக அலைவதுதான் செல்வக்குமாரின் அடையாளம் !

கோயம்புத்தூர் வந்திருந்த செல்வக்குமார் சாலையில் வரும்போகும் எல்லோரையும் மறித்து மரங்களின் மகத்துவத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.சிலர் கேட்கிறார்கள். சிலர் சிரித்து விட்டுக் கடந்து செல்கிறார்கள்.ஆனாலும், செல்வக்குமார் அசரவில்லை. இது தனக்கு விதிக்கப்பட்டது என்பதைப் போல சிரித்த முகத்தோடு தன் பரப்புரையை அசராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். தான் சொல்வதை உள்வாங்கிக் கொள்பவர்களுக்கு ஒரு செடியை இலவசமாக கொடுக்கிறார்.

செடி இலவசம்தான் ஆனால், உங்கள் தொலைபேசி எண் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்."வாங்க சார்.. வாங்க.. பூமி ஏன் வெப்பமாகுது தெரியுமா.? *இதுவரைக்கும் ஒரு மரமாவது நீங்க நட்டு வளர்த்திருக்கீங்களா.?*எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம உங்களை ஏந்தியிருக்கும் இந்த மண்ணுக்காக நீங்க ஏதாவது செய்யணும்ல சார்..ஒரு செடி வாங்கிகிட்டு போய் உங்க வீட்ல நட்டு வளர்ப்பீங்களா.? காசெல்லாம் கிடையாது சார். ஆனா நிபந்தனை உண்டு. கடைசி வரைக்கும் இந்த மரத்தை நீங்க காப்பாத்தணும் சார்" என்று தான் பெற்ற பெண்ணை திருமணம் முடித்துக் கொடுக்கும் மாப்பிளையிடம் வேண்டுவது போல சொல்லிக் கொண்டு இருந்த செல்வக்குமாரிடம் அவரைப் பற்றி கேட்டால்....

என் பேரு செல்வக்குமார், நான் திருப்பூர் தாலுகா அலுவலகத்தில்,அலுவலக உதவியாளராக இருக்கேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு மரம் நடுறதுல ஈடுபாடு உண்டு. என் அப்பா நிறைய மரங்களை நட்டிருக்கிறார். அப்பாகிட்ட இருந்து வந்த ஆர்வம்தான் இது.மண்ணைக் கெடுத்து மரத்தை அழிச்சிட்டா மனுசங்க எப்படிங்க இங்க வாழ முடியும்? இந்த பூமிக்காக நாம ஏதாச்சும் பண்ணணும்னு தோணுச்சி.

உடனே கையில செடிகளை தூக்கிக்கிட்டு ஊர் ஊரா கிளம்பிட்டேன். இதோட பத்து வருஷம் ஆச்சி. இதுவரைக்கும் 40 ஆயிரம் மரக்கன்றுகளை மக்கள் கிட்ட இலவசமா கொடுத்திருக்கேன். ஆரம்பத்துல இதுமாதிரி உடல் முழுக்க செடிகளைச் செருகல. கையிலதான் தூக்கிக்கிட்டுப் போனேன். ஆனா என்னை யாரும் ஏறெடுத்தும் பாக்கல. அப்பதான் நாம ஏதாச்சும் வித்தியாசமா பண்ணாதான் மக்களோட கவனத்தை ஈர்க்க முடிம்னு தோணுச்சி. அதுக்குப் பிறகுதான் பெரிய அளவில் அங்கி தச்சு அதுமுழுக்க செடிகளைச் செருகிகிட்டு ஊர் ஊராக் கிளம்பிட்டேன்.

கிட்டதட்ட 150 கிலோ இருக்கும். ஆனா இதை நான் ரசிச்சுப் பண்றதால எனக்கு பாரம் தெரியலை. ஒவ்வொரு ஊராப் போய் மக்களை சந்திச்சுப் பேசுவேன். பேச்சுலயே யார்கிட்ட செடியைக் கொடுத்தா ஒழுங்கா வளர்ப்பாங்கனு கண்டுபிடிச்சிருவேன். அவங்ககிட்ட செடியைக் கொடுத்துட்டு தொலைபேசி எண் வாங்கிக்கிட்டு வந்திருவேன்.

ஒவ்வொரு மாசமும் சுழற்சி முறையில எதாச்சும் ஒரு எண்ணுக்குத் தொலைபேசி செடியைப் பத்தி விசாரிப்பேன். அவுங்களும் ஆர்வமாச் சொல்வாங்க. அப்ப எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்" என்று சொல்லி நிறுத்திய செல்வக்குமார். "பல பேர் என்னை ஜோக்கராத்தான் பாக்குறாங்க. ஆனா அதப் பத்தி எனக்கு கவலை இல்லை. வாரத்துல சனி, ஞாயிறு, திங்கள்னு மூனு நாளு இதுமாதிரி செடிகளைத் தூக்கிக்கிட்டு கிளம்பிடுவேன். *என் மனைவி கூட, 'வீட்ல ஒருத்தி மரம் மாதிரி உட்காந்துருக்கேன் நீங்க என்னன்னா.. மரம் வளர்க்குறேன்னு சுத்திக்கிட்டு திரியுறீங்க* னு வருத்தப்பட்டாங்க.

ஆனா போகப்போக என் நோக்கத்தை அவங்க புரிஞ்சிகிட்டாங்க.இப்போ அவுங்களே என் செலவுக்குக் காசெல்லாம் கொடுத்து சந்தோஷமா அனுப்பி வைக்கிறாங்க. நான் சாகுறவரைக்கும் இது மாதிரி செடிகளைக் கொடுத்து மரமாக்கிக்கிட்டே இருக்கணும். அதுதான் என் ஆசையும் லட்சியமும்" என்று கண்களில் நம்பிக்கை ஒளிர சொல்லி முடித்தார்.

Updated On: 3 July 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...