ஒரே அழைப்பில் பாகிஸ்தானுக்கு நான்கு சிக்கல்களை ஏற்படுத்திய இந்தியா..!

பைல் படம்
Pakistan Tamil - பாகிஸ்தான் நாட்டினை அமைதி பேச்சுக்கு அழைத்ததன் மூலம் இந்தியா அந்த நாட்டின் மீது நான்கு விதமான ராஜதந்திர தாக்குதலை நடத்தியுள்ளது.இதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டு உள்ளது.
பாகிஸ்தான் மீதான தாக்குதல் என்றால் வெடிமருந்து நிரப்பிய ஏவுகணை இல்லை. வார்த்தை ஏவுகணை தாக்குதல். ஆம் பாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாங்கள் இந்தியா உடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என்று கூறி இருந்தார். அதையே இந்தியா இப்போது பாக்கிஸ்தான் நாட்டுக்கு ஏவுகணை மாதிரி திரும்ப அனுப்பி உள்ளது. ஆம் இந்தியா நாட்டின் கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள எஸ்சிஓ நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறமையை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவு நேர்த்தியான உலகஅறிவு ஆற்றல் கொண்ட மனிதர். அதுவும் தமிழர் என்றால் சும்மாவா. இவரால் தறிபோது இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது பாகிஸ்தான்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. முதல் ஏவுகணை இந்தியாவின் அழைப்பு. இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்தால் பாகிஸ்தான் நாட்டில் என்ன நடக்கும். நிச்சயமாக பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் அரசு மீது பழிவாங்க நடவடிக்கை எடுக்கும். ஏன் என்றால் பாகிஸ்தான் நாட்டில் உள்ள ராணுவ அதிகாரிகள் இந்திய நாட்டை காரணம் காட்டிதான் ஆயுதங்கள் வாங்கி அதில் அதிக அளவில் ஊழல் செய்து கொண்டு உள்ளார்கள்.
இந்தியா பாகிஸ்தான் இடையே இவர்கள் அமைதி ஏற்பட விட மாட்டார்கள். சரி இரண்டாவதாக பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய நாட்டுக்கு எதிராக இருக்கும் தீவிரவாத அமைப்புகள் நிச்சயமாக பிரச்னைகளை ஏற்படுத்துவார்கள். மூன்றாவதாக இன்றைய நிலையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி பாகிஸ்தான் நாட்டில் நிலவும் உணவு மருந்து மாத்திரைகள் தட்டுபாடுகளை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.அதற்கு ஏற்ப இந்தியா ஏற்கெனவே தனது சார்பில் அறிக்கை வெளியிட்டது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மருந்து மாத்திரைகளை தருகிறோம் என்று இப்போது பாகிஸ்தான் இந்தியாவில் நடக்கும் எஸ்சிஓ நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வில்லை என்றால் அது பாகிஸ்தான் நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும்.
ஏன் என்றால் அந்த அளவுக்கு அங்கே உள்ள மக்கள் மத்தியில் பஞ்சம் தலைவிரித்து ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறது. சரி நான்காவது ஏவுகணை நேற்று தானே பாகிஸ்தான் பிரதமர் இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தார். இந்தியா இப்போது அழைப்பு விடுத்துள்ளது ஏன் பாகிஸ்தான் அதில் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அப்படி என்றால் பாக்ஸ்தான் நாட்டுக்கு அமைதி பேச்சுவார்த்தை தேவையில்லை. தீவிரவாத அமைப்பு தான் தேவையாக உள்ளது என்ற மனநிலையை ஐநா சபையின் நாடுகள் மத்தியில் உருவாக்கும்
இதனால் இந்தியா இமேஜ் உலக அரங்கில் மீண்டும் ஒரு முறை உயரும். பாகிஸ்தான் நாட்டின் கோரிக்கை ஏற்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு பயந்து கொண்டு இந்தியா விடுத்துள்ள அமைதி பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என்று இதனால் உலக நாடுகளின் மத்தியில் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக மனநிலை உருவாக்கும்.
அப்படி உருவாகும் போது பாக்கிஸ்தான் உலக வங்கி மற்றும் FATF அமைப்பு சார்பில் இருந்து பிரச்னை சந்திக்க நேரிடும். இந்த எஸ்சிஓ நாடுகள் கூட்டமைப்பு என்பது தெற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளும் இணைந்து நடத்தும் ஒரு கூட்டமைப்பு இதில் பாகிஸ்தான் கலந்து கொள்ள வில்லை என்றால் அது தெற்கு ஆசியா நாடுகள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்தி வைக்க முடியும். எப்படி உள்ளது நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக வைத்த ஆப்பு.
இதைதான் அன்று மோடி மகாராஷ்டிர மாநிலத்தில் வைத்து கூறினார். உங்களுக்கு எல்லாம் அணு ஆயுத ஏவுகணைகள் தேவையில்லை, எங்கள் வெளியுறவு கொள்கை போதும்' . உங்கள் நாட்டை நாங்கள் போர் தொடுத்து தாக்குதல் நடத்த தேவையில்லை. நீங்களே உங்கள் நாட்டை முற்றிலும் அழித்து கொண்டு விடுவீர்கள் என்று. அது இப்போது நடந்து வருகிறது இந்தியா வரலாற்றில்வெளியுறவுத்துறையின் மூலமாக ஏவப்பட்டுள்ள இந்த நான்கு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் எப்படி தப்பிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu