மேகமலையை சுற்றிப்பார்க்க இனி கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?

மேகமலையை சுற்றிப்பார்க்க  இனி கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
X
மேகமலை பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகளிடம் நபர் ஒருவருக்கு 30 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தேனி மாவட்டம், மேகமலையில் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு உள்ளிட்ட ஏராளமான மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக்கட்டணமாக 30 ரூபாய், கேமராக்களுக்கு 50 ரூபாய், வீடியோ கேமராக்களுக்கு நுாறு ரூபாய் கட்டணம் என வனத்துறையினர் வசூலிக்கின்றனர். இந்த கட்டணத்தில் வரும் பணத்தை மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கு செலவிட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story