இந்தியா தேர்தலை சீர்குலைக்க பல உலக நாடுகள் சதி..!
2024ம் ஆண்டு இந்தியாவில் நடந்து வரும் பார்லிமென்ட் தேர்தலில்... மோடி வெற்றி பெறுவார்.
2024ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் தேர்தலில், அதாவது தற்போதய தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, முழு மெஜாரிட்டியுடன் அமையும் என உலக நாடுகள் கணித்துள்ளன. இது தொடர்பாக வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுக்கு செய்திகளை அனுப்பி விட்டன. மீண்டும் மோடி பிரதமராக வந்தால் இந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
ஏற்கனவே விவசாயப் பொருள்களின் உற்பத்தி, உள் நாட்டு உபயோகம் மற்றும் ஏற்றுமதியில் தன்னிறைவு அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல், நிலக்கரி, இவற்றின் இறக்குமதியை குறைத்து ஆல்டர்நேட் எனர்ஜி ௭னப்படும் சூரிய ஒளி, காற்றாலை, அணுமின் ஆற்றலை பயன்படுத்தி தன்னிறைவு பெறுவதற்கான வழிகள் முழுமூச்சில் நடைபெறுகின்றது.
உலகிலேயே மிகப்பெரிய இந்திய ரயில்வே தனது அனைத்து டீசல் இன்ஜின்களையும் எலக்ட்ரிக் இன்ஜின்களாக மாற்றி விட்டது. டீசல் உபயோகம் படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது மென்பொருள் ஏற்றுமதியிலும், இன்ஜினியரிங் பொருள்கள் ஏற்றுமதியிலும் நமக்கென ஒரு இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
பல வெளிநாடுகளுக்கு இந்த ஆயுத வியாபாரம்தான் அரசுக்கு வருமானமே. 70 ஆண்டுகளாக இந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது ராணுவத்திற்கு தேவையான குண்டூசி முதல், ஷூவிலிருந்து, யூனிஃபார்மிலிருந்து, பீரங்கியிலிருந்து, ஏவுகணை வரை இறக்குமதி செய்து மற்ற நாடுகளை வாழ வைத்துக்கொண்டிருந்து.
மோடி அரசு ஐஎஸ்ஆர்ஓ மூலம் ராக்கெட் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு கண்டுள்ளது. அதே போல் ராணுவ தளவாட உற்பத்தியிலும் தன்னிறைவு கண்டால் நமது இறக்குமதி படிப்படியாக குறையும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் உயரும். இந்தியா உலக அளவில், சீனாவை மிஞ்சி தவிர்க்க முடியாத நாடாக உயரும்.
இப்போது எதிரி நாடுகளுக்கு மிகப்பெரிய சவால் மீண்டும் மோடி பிரதமராகி விட்டால் இந்தியா அடிமை நாடாக எல்லாவற்றிற்கும் கையேந்தி நிற்காது. இதில் இந்தியாவின் எதிரி நாடுகள் ஒன்று சேர்ந்து அரசியல்வாதிகளையும், பத்திரிக்கைகளையும், சோசியல் மீடியாக்களில் பலரையும், சமூக சீர்திருத்தவாதி என்ற பெயரில் உலா வரும் பலரையும் இறக்கி விட்டுள்ளது. இவர்கள் பணி மோடியை வீழ்த்துவது.
மழை வந்தாலும் மோடி காரணம், இடி இடித்தாலும் மோடி காரணம், வெயில் அடித்தாலும் மோடியே காரணம் என்ற பிம்பத்தை உருவாக்குவது. மோடிக்கு எதிராக போராட்டங்களை தூண்டுவது. இந்த எதிரி நாடுகளின் திட்டம்... இந்தியாவை தன்னிறைவு பெறாத நாடாக, உபயோகிப்பாளர் சந்தை உள்ள நாடாக, பெட்ரோல், டீசல் முதலியவற்றிற்கு எப்போதும் கையேந்தும் நாடாக வைத்திருக்க வேண்டுமாயின் மோடியை அடுத்த முறை ஜெயிக்க விடக்கூடாது.
இதுவரை மோடி மீதோ, அவர்களின் அமைச்சர்கள் மீதோ எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எச்ஏஎல், ஐஎஸ்ஆர்ஓ போன்றவைகள் இந்திய அரசின் நிறுவனங்கள், அங்கு நடைபெறும் ஆராய்சிகள், தயாரிப்புகள் அனைத்தும் Highly confidential. அதில் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் அந்நியரை உள்ளே அனுமதிக்க முடியாது. அப்படி செய்தால் அது இந்திய நாட்டின் பாதுககப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாய் முடியும். இந்தியாவை அழிக்க நினைக்கும் நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை அடிமையாக வைத்திருக்க நினைக்கும் சில அந்நிய கைக்கூலிகள் இந்த முக்கியமான விஷயத்தை மறந்து விட்டார்கள். அந்நிய சக்திகளின் சதி இந்த தேர்தலில் மிக அதிகமாக இருக்கிறது. மோடியை தோற்கடிக்க எந்த நிலைக்கும் இறங்க தயாராக இருக்கிறார்கள்.
இந்திய வரலாற்றிலேயே இந்த தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல். அன்னிய கும்பல்களின் பணபலம் பத்திரிகை செய்தி இவைகள் எல்லாம் ஒரு பொருட்டு இல்லை என்று மக்கள் புறம் தள்ளி தேசத்தின் பக்கம் ஒற்றுமையாக நின்று வென்று காட்ட வேண்டும். அந்நிய சக்திகள் வெற்றி பெற்றால், இந்தியாவை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. இந்த முறை மோடி வெற்றி பெற்றால்.. இந்தியா மிகப்பெரிய அளவில் வளரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu