வீரபாண்டி அருகே டிப்பர் லாரி- அரசு பஸ் மோதல்: 19 பேர் காயம்

வீரபாண்டி அருகே டிப்பர் லாரி- அரசு பஸ் மோதல்: 19 பேர் காயம்
X

பைல் படம்.

வீரபாண்டி அருகே டிப்பர் லாரியும், அரசு பஸ்சும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலத்த காயமடைந்தனர்.

தேனி வீரபாண்டி அருகே டிப்பர் லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 19 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

கம்பத்தில் இருந்து தேனிநோக்கி வந்த அரசு பஸ்சும், கம்பம் நோக்கி சென்ற டிப்பர் லாரியும், வீரபாண்டி பைபாஸ்ரோட்டின் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் அமரேசன், 46, டிப்பர் லாரி டிரைவர் லைஜூ, 41 உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!