முல்லைப்பெரியாறு அணை குறித்த TIGER ஆவணப்படம்: புலி உறும போகிறது தெரியுமா?

முல்லைப்பெரியாறு அணை குறித்த TIGER ஆவணப்படம்: புலி உறும போகிறது தெரியுமா?
X

முல்லைப்பெரியாறு அணை (கோப்பு படம்).

முல்லைப்பெரியாறு அணை குறித்த TIGER ஆவணப்படம் விரைவில் வர இருக்கிறது. புலி எப்படி உறும போகிறது என்பதை அறிய தொடர்ந்து படிப்போமா?

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 6,150 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நகரம் ஜோஷிமத்.

பாரம்பரியமிக்க நகரமான இந்த ஜோசிமத், பத்ரிநாத் செல்லும் யாத்திரிகர்கள் தங்கிச்செல்லும் நகரமாகும். இமயமலை சரிவில் அமைந்திருக்கும் இந்த நகரத்தில் கட்டுக்கடங்காத குடியேற்றத்தால், தற்போது மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஜோசிமத் நகரம் மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டது.

பேரிடர் பாதித்த பகுதியாகவும், கட்டுமானங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் ஜோசிமத் நகரத்தில், எந்நேரமும் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்கிற நிலையே இப்போது வரை நீடிக்கிறது.

ஜோஷிமத் நகரத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகை பெருக்கமும், அதிக அளவிலான கட்டுமானமும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என்று கடந்த 1974 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி மிஸ்ரா தலைமையிலான கமிட்டி அறிக்கை வெளியிட்ட பிறகும்... அங்கு எதுவும் நின்றதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குண்டான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,,,

திடீரென ஜோசிமத் நகரத்திற்கு ஆதரவாக களம் இறங்கிய மலையாளிகளான...அஸ்வின் மடப்பள்ளி, Sanuf Mohad, ஆகியோர் தாங்கள் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

உத்தரகாண்டில் பாதிக்கப்பட்ட ஜோசிமத் நகரத்திற்கு கீழே உள்ள பாறை அடுக்குகள் தொடர்ச்சியான கட்டுமானங்கள் காரணமாக நொறுங்கி விட்டதாலேயே இன்றைக்கு அந்த நகரம் மண்ணுக்குள் புதைய ஆரம்பித்து இருக்கிறது.

பல நூறு வீடுகளில் வசிக்கும் சுமார் 4000 பேர் இடம் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம் நீண்டகால பூமி அழுத்தமே...

*Land Subsidence* என்கிற தத்துவத்தை மையப்படுத்தியே இந்த மாற்றங்கள் ஜோஷிமத் நகரில் நிகழ்ந்து வருகிறது என இந்த இரண்டு யூட்யூபர்களும்...கூறியுள்ளனர். அவர்கள் அடுத்துச் சொன்னது தான் அபத்தத்திலும் அபத்தம்...

பெரியாறு அணை மூலமாக, 125 ஆண்டுகளுக்கு மேலாக இடுக்கி மலையகத்தில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, இங்கும் பெரிய அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது என்றும் Land Subsidence தத்துவம் ஜோசிமத் நகரத்திற்கு மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு அணையை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் தீயை பற்ற வைத்திருக்கிறார்கள்.

இதனை முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. இச்சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பிராய்லர் கோழிகளுக்கு ஏது மூளை என்று இதை நாம் கடந்து சென்று விட முடியாது. எளிதில் மலையாள மக்களை வசீகரிக்க கூடிய மொழியில் அவர்கள் உரையாடலை நடத்துகிறார்கள். கடந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேருக்கு மேல் இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோசிமத் நகருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்தது...இவர்கள் முல்லைப் பெரியாறு அணை மீது வைக்கும் நெருக்கடி என்பது இனவெறி சார்ந்தது...

சுற்றுச்சூழல் சார்ந்த நெருக்கடிகளை, இனவெறியோடு இணைக்கும் தந்திரமும், நரித்தனமும் அறிந்த ஒரே கூட்டம், இந்த மலையாள கூட்டம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என தங்களை நினைத்துக் கொண்டு, ஏதோ அறிவியல் வித்தைகள் எல்லாம் தெரிந்தவர்களைப் போல பேசும் இவர்களுக்கு கடுமையான பாடம் புகட்ட வேண்டும்.

1974 ஆம் ஆண்டு ஜோசிமத் நகரத்தின் அபாயத் தன்மை குறித்து மிஸ்ரா கமிட்டி கொடுத்த அறிக்கைகளை அந்த மாநிலம் கவனமாக புறந்தள்ளியது போல முல்லைப் பெரியாறு அணையில் எந்த சம்பவமும் நடக்கவில்லை.

அப்படிப் பார்த்தால் 10 டி. எம். சி. தண்ணீருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட முல்லைப் பெரியாறு அணையாலேயே பிரச்சனை என்றால் 70 டி.எம்.சி. கொள்ளளவோடு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இடுக்கி அணையால் எந்த பிரச்சினையும் வராதா மலையாள மூடர்களே.

நாம் சோறு போட்டு பாலூட்டி சீராட்டி வளர்த்த மாநிலம் என்பதற்காக எல்லா நாளும் உங்களை விட்டு விட முடியாது. முல்லைப் பெரியாறு அணை மூலமாக தமிழ்நாடு பெற்றதையும், இழந்ததையும் *TIGER* என்கிற பெயரில் ஆவண படமாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமும், கம்பம் வட்டார பத்திரிகையாளர் சங்கமும் இணைந்து எடுக்க இருக்கிறோம்.

*விரைவில் TIGER உறுமும்..* உறுமலை கண்டு மிரளாதீர்கள். முடிந்தால் எதிர்கொள்ளுங்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!