சிலிண்டர் விலை 'விர்ர்...' தடுமாறும் தள்ளுவண்டி டிபன் கடைகள்

சிலிண்டர் விலை விர்ர்... தடுமாறும் தள்ளுவண்டி டிபன் கடைகள்
X

கோப்பு படம் 

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2400 ரூபாயினை கடந்துள்ளதால், வடை கடைகளும், சிறு ஓட்டல்களும் திணறி வருகின்றன.

இது குறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் நான்கு மாதங்களுக்கு முன்பு வரை 1600 ரூபாய் என விற்கப்பட்டது. தற்போது ஒரு சிலிண்டர் விலை 2400 ரூபாயினை தாண்டி உள்ளது. அதாவது ஒரு சிலிண்டருக்கு விலை 800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சில பெரிய ஓட்டல்களில் வடை விலையை உயர்த்தி விட்டனர். இட்லி, தோசை உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. பெரிய ஓட்டல்கள் எவ்வளவு விலை உயர்த்தினாலும் வியாபாரம் தடைபடாது. ஆனால் சிறிய ஓட்டல்கள், வடைகடைகளின் நிலை தான் மிகவும் பரிதாபம்.

சிறிய வடை கடைகள் 10 ரூபாய்க்கு 3 வடைகள் போட்டு விற்கின்றனர். ஒரு இட்லி 5 ரூபாய், 6 ரூபாய் எனவும், ஒரு தோசை 15 ரூபாய் எனவும் விற்கின்றனர். இதன் அளவையும் குறைக்க முடியாது. விலையை கூட்டினாலும் வியாபாரம் இருக்காது. எனவே தற்போதே சில கடைகள், சிறு ஓட்டல்கள் மூடப்பட்டு விட்டன. இந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் திணறி வருகிறோம் என்றனர்.

Tags

Next Story
ai in future agriculture