போடி- சென்னை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

போடி- சென்னை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
X

போடி ரயில் - கோப்புப்படம் 

Ariyalur To Chennai Train Ticket Booking-வரும் ஜூன் மாதம் 15ம் தேதி வியாழக்கிழமை போடியில் இருந்து சென்னைக்கு தொடங்கும் ரயில் சேவைக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது

Ariyalur To Chennai Train Ticket Booking-மதுரை- போடி அகல ரயில் பாதை பணிகள் மட்டும் 12 ஆண்டுகளாக நடைபெற்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும் போடியில் இருந்து சென்னைக்கு ரயில் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையினை ஏற்று போடியில் இருந்து சென்னைக்கு வரும் ஜூன் 15ம் தேதி முதல் ரயில்சேவை தொடங்குகிறது. இதற்கான விழா போடியில் மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமையில் நடக்கிறது.

வரும் 15.06.23 வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு சென்னை ரயில் (ரயில் எண்: 20602) போடியில் இருந்து புறப்படுகிறது. (ரயில் எண் 20602) போடி - சென்னை ரயில் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் போடியில் இருந்தும், ரயில் எண் 20601 சென்னையில் இருந்து போடிக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இயங்கும்.

போடி - சென்னை ரயில் இடையில் உள்ள தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும். 20601 சென்னை - போடி ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 10.30 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:35 மணிக்கு போடியை சென்றடையும். 20602 போடி - சென்னை ரயில் போடியில் இரவு 08.30 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

இது தவிர்த்து வழக்கம் போல் ரெகுலர் சேவைகள், போடி - மதுரை தினமும் மாலை 05.50 க்கு போடியில் புறப்பட்டு 07.50 க்கு மதுரை சென்றடையும். மதுரை - போடி தினசரி ரயில் காலை 08.20 க்கு மதுரையில் புறப்பட்டு 10:30 மணிக்கு போடியை சென்றடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. வழக்கமாக ரயில் டிக்கெட் புக் செய்யும் அத்தனை டிஜிட்டல் புக்கிங் சென்டர்கள், மற்றும் ரயில்நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business