தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் நடந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

பெரியகுளம் கீழவடகரை போடன்குளத்தில் வசித்தவர் கண்ணன் (வயது 47). இவர் வேட்டவராயன் தெருவில் உள்ள தனியார் வீட்டில் இருபது அடி உயரத்தில் நின்று கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த கண்ணன் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தேனி அன்னஞ்சி ஊஞ்சாமம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவநீதன், (வயது 45). இவர் தனது தோட்டத்தில் மோட்டார் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது தவறி 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்து இறந்தார். தேனி தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டனர். அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவதானப்பட்டி புதுாரை சேர்ந்தவர் சந்திரன், (வயது 51). இவர் மஞ்சளாறு அணை ரோட்டில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். டூ வீலரில் எதிரே வந்த உசிலம்பட்டியை சேர்ந்த கார்த்திக், (வயது 21) இவர் மீது மோதினார். பலத்த காயமடைந்த சந்திரன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!