மாஸ்க் போடாமல் பயணித்தவர்களுக்கு நேரடியாக அபராதம் விதித்த தேனி கலெக்டர்
மாஸ்க் போடாமல் ஆட்டோவில் பயணம் செய்தவர்களை அறிவுறுத்திய தேனி கலெக்டர் முரளீதரன்.
தேனி கலெக்டர் முரளீதரன் மாஸ்க் போடாமல் பஸ் பயணம் செய்தவர்களுக்கும், பஜாரில் உலவியவர்களுக்கும் தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
தேனி கலெக்டர் முரளீதரன் நேற்று இரவு திடீரென தேனி பஜாருக்கு வந்து கடைகளில் ஏறி இறங்கி சோதனை செய்தார். மாஸ்க் போடாமல் வந்தவர்களை எச்சரித்தும், அறிவுறுத்தியும் அனுப்பினார்.
இன்று காலை 8 மணிக்கே தனது ஆய்வினை தொடங்கி விட்டார். ஆண்டிபட்டி மற்றும் சுற்றுக்கிராமங்களில் பயணித்த கலெக்டர் ஒவ்வொரு இடத்திலும் ரோட்டோரம் நின்று கொண்டு மாஸ்க் இல்லாமல் பயணித்தவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தார். காரில், சரக்கு வேனில், பஸ்சில் என எதில் பயணித்தாலும் மாஸ்க் இல்லாவிட்டால் அவர்களுக்கு கலெக்டர் அபராதம் விதித்தார்.
கிட்டத்தட்ட (இரண்டு நாளில்) 10 மணி நேரத்திற்கும் மேலாக கலெக்டர் தொடர்ச்சியாக மாஸ்க் அணிவது, தடுப்பூசி போடுவது, போட்டவர்களின் ஆவணங்களை சரிபார்ப்பது போன்ற பணிகளில் மட்டும் கலெக்டர் தனது நேரத்தை செலவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu