/* */

உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்க இதுதான் காரணம்.! அடுத்து லோக்சபா தேர்தல் - திமுகவின் வியூகம்

உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு பெரிய மெகா வெற்றியை பெற்ற தி.மு.க., அதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து விட்டது. இதே பாணியில் லோக்சபா தேர்தலுக்கும் தயாராகி வருகிறது.

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்க இதுதான் காரணம்.! அடுத்து லோக்சபா தேர்தல் - திமுகவின் வியூகம்
X

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இப்படி ஒட்டுமொத்தமாக அத்தனை அரசியல் கட்சிகளையும் புரட்டிப்போட்டு விட்டு தி.மு.க., இவ்வளவு பெரிய வெற்றிக்கோப்பையை இதுவரை பெற்றதில்லை. எங்கு திரும்பினாலும் தி.மு.க., வெற்றி என்பதே பேச்சாக உள்ளது. இதற்கான காரணங்களை கண்டறிய தி.மு.க., மாவட்ட வாரியாக குழு அமைத்தது.

இக்குழுவினர் அளித்த வெற்றிக்கான காரணங்களில் மாவட்ட வாரியாக ஒன்றிரண்டு விஷயங்கள் தான் மாறுகின்றன. பெரும்பாலான காரணங்கள் மாநிலம் முழுக்க ஒரே மாதிரி உள்ளன. அதில் முக்கியமானது முதல்வர் ஸ்டாலின் மீதான இமேஜ். அவர் மிகச்சிறந்த முதல்வர் என்பதை நொடிக்கு நொடி நிரூபித்து வருகிறார். கட்சியினர் மத்தியில் சிறந்த தலைவர் என்பதையும் நிரூபித்து வருகிறார். அதாவது 'தாய் எட்டடி பாய்ந்தால் கன்று பதினாறு அடி பாயும்' என்ற பழமொழியினை நிரூபித்து வருகிறார். கருணாநிதி என்ற புலிக்கு பிறந்த மிகப்பெரிய சூரப்புலி தான் என்பதை நிரூபித்து வருகிறார்.

தவிர தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே பொதுவிநியோகத்துறையில் மாவட்ட கலெக்டர்கள் மூலம் முதல்வர் எடுத்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று தந்துள்ளது. அதேபோல் மகளிர்க்கு டவுன் பஸ்களில் இலவச பயணம் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த பெண்களின் ஆதரவையும் அள்ளிக் கொடுத்துள்ளது. கூட்டுறவு சங்கங்களி்ல் நகைக்கடன் தள்ளுபடி செய்ததும், நிச்சயம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற முதல்வரின் உறுதியான அறிவிப்பும் பெண்கள் ஒட்டுகளை மொத்தமாக தி.மு.க., அள்ள அடிப்படை காரணமாகவே அமைந்து விட்டது.

கொரோனா பேரிடர் காலத்தில் பதவியேற்றாலும் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே கொரோனா பேரிடரை அவர் எதிர்கொண்ட விதம், தடுப்பூசி செலுத்தி மக்களை பாதுகாத்தது, 3வது அலையினை வீழ்த்தி வென்றது, ஊரடங்கின் போது, ஒரு சாதாரண குடும்பத்தலைவனின் மனநிலையில் இருந்து மக்களை கையாண்ட விதம் ஒட்டுமொத்த ஆதரவையும் அள்ளிக் கொடுத்து விட்டது.

அதேநேரம் எதிர்முகாமில் அ.தி.மு.க., கோயிலில் உடைக்கப்பட்ட சிதறு தேங்காய் போல் சிதறி கிடந்தாலும், அக்கட்சியினை பற்றி கவலைப்படாமல், எங்குமே அ.தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்காமல், தான் என்ன செய்யப்போகிறோம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியது ஒருவித புதிய அரசியல் அணுகுமுறையாகவே இளம் வாக்காளர்களும், புதிய வாக்காளர்களும் கருதுகின்றனர். இப்படி அடுக்கடுக்கான காரணங்களை சொன்னாலும், தற்போது இந்த அத்தனை சாதகங்களையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தி.மு.க., தலைமை மிகவும் உறுதியான முடிவுக்கு வந்து விட்டது.

இப்போதே லோக்சபா தேர்தலுக்கு தயாராக என்னென்ன திட்டமிட வேண்டும் என்பதில் கட்சி மேலிடம் தெளிவாக உள்ளது. அதில் ஒன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம். இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் இத்திட்டம் தள்ளிப்போனாலும், லோக்சபா தேர்தலுக்கு முன்பே அமலுக்கு வந்து விடும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை என தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.

அடுத்து கட்சியினரின் உழைப்பு முக்கியமான காரணம். கடினமாக உழைத்த கட்சியினர் சில இடங்களில் தலைமையினை் அறிவிப்பினை மீறினாலும், ஆகாத சில கட்சிகளுக்காக சொந்த கட்சியினரை பலியிட வேண்டாம். அவர்கள் உள்ளூரின் கள நிலவரம் அறிந்தவர்கள். எனவே சற்று மென்மையான போக்கினை கையாளுங்கள் என இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாகவே அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் தான் தேனி உட்பட மாநிலம் முழுவதும் தலைமையின் அறிவிப்பினை மீறிய கட்சிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தலைமை சற்று நிதானித்து வருகிறது என்றும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.

அடுத்து பெண்களை கவர தி.மு.க., எடுத்துள்ள அஸ்திரம் அத்தனை கட்சிகளையும் கலங்கடிக்கும் என அக்கட்சினரே கூறுகின்றனர். மிகுந்த சிரமத்திற்கு இடையே தான் அந்த ரகசிய திட்டம் பற்றி உறுதிப்படுத்த முடிந்தது. அதாவது டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பது பெண்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்று தந்துள்ளதால், ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் அத்தனை மொபசல் பஸ்களிலும் இலவசம் என்ற அறிவிப்பி்னை வெளியிடலாமா? என தி.மு.க.,. தலைமை பரிசீலித்து வருகிறது. இதற்கு ஆகும் செலவு என்ன? இந்த செலவை ஈடுகட்டுவது எப்படி? தி.மு.க., தலைமை ஆலோசித்து வருகிறது.

சில மூத்த நிர்வாகிகளோ தற்போது தி.மு.க., அரசு எடுத்து வரும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே இந்த சவாலையும் சமாளித்து விட முடியும் என்று தலைமைக்கு பரிந்துரைத்து வருகின்றனர். ஆக ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி தேர்தல் கொடுத்த வெற்றி, தி.மு.க., தலைமைக்கு புதிய தெம்பினை கொடுத்துள்ளது. அதேவேகத்தில் 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது என கட்சியினர் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.

Updated On: 15 March 2022 4:43 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்