திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
X

தேனி வைகை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசும், பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.

தேனி வைகை தமிழ்சங்கத்தில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை, வைகை தமிழ்ச்சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக மிக எளிமையாக அதிக கூட்டம் சேராமல் இந்த போட்டி வைகை தமிழ்சங்கத்தில் நடத்தப்பட்டது.

இதில் மாணவிகள் முத்தமிழ்சாமினி, செந்தமிழ்சாமினி, மதுஸ்ரீ ஆகியோர் 1330 குறள்களையும் ஒப்புவித்து வெற்றி பெற்றனர். இவர்களுக்கு தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ பரிசும், பாராட்டு சான்றும் வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்