தேனி : பள்ளி மாணவி கடத்தல் வழக்கில் தந்தை மகன் உட்பட 3 பேர் மீது வழக்குவு

தேனி : பள்ளி மாணவி கடத்தல் வழக்கில் தந்தை மகன் உட்பட 3 பேர் மீது வழக்குவு
X
போடிநாயக்கனூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக தந்தை, மகன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்றதாக தந்தை, மகன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போடிநாயக்கனூர் அருகே உள்ள கீழச்சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவி, 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருடன் இதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் கோபி (29) என்பவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய கோபி, அவரது தந்தை கணேசன், தம்பி அஜித்குமார் ஆகியோர் உதவியுடன் பள்ளி மாணவியை கடத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி மாணவியின் பெற்றோர் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Tags

Next Story