தேனி மகளிர் காவல்நிலையத்தில் ஆட்சியர் ஷஜீவனா திடீர் ஆய்வு
தேனி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்சியர் ஷஜீவனா திடீர் என ஆய்வு செய்தார்.
தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆட்சியர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுவாகவே மாவட்ட ஆட்சியர்கள் காவல்நிலையங்கலை ஆய்வு செய்ய மாட்டார்கள். ஆய்வு செய்யும் அதிகாரம் ஆட்சியர்களுக்கு இருந்தாலும், அதற்கென தனியாக சம அந்தஸ்த்து உள்ள ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி இருப்பதால், ஆய்வு செய்ய மாட்டார்கள்.
இதற்கு முன்பு ஒருமுறை தேனி ஆட்சியராக பஷீர்அகமதுவும், எஸ்.பி.,யாக ராஜேஷ்தாஸ் -ம் இருந்த போது, பஷீர்அகமது காவல்நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியருக்கும் எஸ்.பி.,க்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விஷயம். அந்த கருத்து மோதலில் உச்சகட்டமாக, ஆட்சியர்பஷீர்அகமது போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின்னர் வந்த ஆட்சியரும், எஸ்.பி.,யும் மிகவும் இணக்கமான ஒரு சூழலில் தான் பணிபுரிந்தனர். இப்போது உள்ள ஆட்சியர் ஷஜீவனாவும், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவும் மிகவும் இணக்கமாகவும் செயல்படுகின்றனர். இந்நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனது கேம்ப் அலுவலகம் புறப்பட்ட ஆட்சியர் ஷஜீவனா இரவு 8.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, முதல்நிலை காவலர் ஜெரின்பாத்திமா உட்பட சிலர் பணியில் இருந்தனர்.
அங்கு சென்ற ஆட்சியர் ஸ்டேஷனில் கைதி பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, சமுதாயப்பணி பதிவேடு, நடப்புத்தாள் பதிவேடு, சுற்றுக்காவல் பதிவேடு, மாதிரி பணி பதிவேடு, சீதன பதிவேடு, பொது நாட்குறிப்பு பதிவேடு, நடப்பு தாள் பதிவேடுகளை ஆய்வு செய்தார். கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள், காவலர்களின் பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu