வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு தேனியில் இருந்து செல்லும் காய்கறிகள்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு தேனியில் இருந்து செல்லும் காய்கறிகள்

காய்கறி லாரி - கோப்புப்படம் 

கடும் மழையால் பாதிக்கப்பட்ட வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தேனியில் இருந்து காய்கறிகள் செல்கின்றன.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல வட மாவட்டங்களும், துாத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களும் மழையால் பலத்த சேதத்தை சந்தித்து விட்டன. இந்த மழை இந்த மாவட்டங்களில் காய்கறி உட்பட விவசாய சாகுபடியினை மொத்தமாக வீழ்த்தி விட்டது. இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்கள் கூட பெரும் விவசாய உற்பத்தி இழப்பினை சந்தித்தன.

தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்கள் அதிக மழைப்பொழிவினை பெற்றாலும், விவசாயத்தில் பெரும் சேதத்தை சந்திக்கவில்லை. இதனால் இந்த மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வாங்கிச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக தேனி மாவட்டத்தில் தற்போது காய்கறி உற்பத்தி பெரிய அளவில் நடந்து வருகிறது. தினமும் பல நூறு டன்கள் காய்கறிகள் விளைகின்றன.

இந்த காய்கறிகளில் பெரும் பகுதியினை வியாபாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் இந்த மாவட்ட விவசாயிகளுக்கு இந்த ஆண்டு காய்கறி விளைச்சலில் குறிப்பிடத்தக்க அளவு வருவாய் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story