தேனி: நெரிசலில் சிக்கி தவிக்கும் மாணவிகளை பாதுகாக்க திணறும் போக்குவரத்து போலீசார்

தேனி: நெரிசலில் சிக்கி தவிக்கும் மாணவிகளை பாதுகாக்க திணறும் போக்குவரத்து போலீசார்
X

தேனியில் நெரிசல் மிகுந்த பெரியகுளம் ரோட்டில், போக்குவரத்தை நிறுத்தி, மாணவிகளை பத்திரமாக பள்ளிக்குள் அனுப்பும் போலீசார்.

Today Theni News - தேனியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலில் பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

Today Theni News - தேனியில் பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி, அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பி.சி., கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி., பள்ளி, பழனிசெட்டிபட்டி பழனியப்பா பள்ளி போன்ற பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மெயின்ரோட்டை கடந்த செல்ல வேண்டும். அதாவது பெரியகுளம், மதுரை, கம்பம் மெயின் ரோடுகளை கடந்து செல்ல வேண்டும்.

இந்த ரோடுகளில் காலை நேரங்களில் வாகனப்போக்குவரத்து மிக, மிக அதிகமாக இருக்கும். இந்த வாகன நெரிசலுக்கு இடையே மாணவ, மாணவிகளை பத்திரமாக பள்ளிக்குள் அனுப்ப வேண்டிய கட்டாயம் போக்குவரத்து போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் வெளியேறும் நிலையிலும் இதே சிக்கல் தான் உள்ளது.

போலீஸ் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி முன்பு வந்து நிற்கும் போலீசார் வாகனங்களை நிறுத்தி, மாணவிகளை பள்ளிக்குள் அனுப்புகின்றனர். இவர்கள் மட்டும் இப்படி நிறுத்தி அனுப்பாவிட்டால், நிச்சயம் விபத்து ஏற்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு சிக்கல் ஏற்படும். இந்த சிரமமான வேலையை தேனி போக்குவரத்து போலீசார் மிகவும் சிரத்தையுடன் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் இவர்களை பாராட்டி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!