தேனி: நில மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது

தேனி: நில மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது
X
தேனியில் 182 ஏக்கர் நிலமோசடி வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகிஉட்பட 3 பேரை சி.பி,சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் 182 ஏக்கர் நில மோசடி செய்த வழக்கில் முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 3 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் 182 ஏக்கர் அரசு நிலத்தை பட்டா மாறுதல் செய்து நில மோசடி செய்ததாக முன்னாள் அ.தி.மு.க., பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உட்பட பலர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசு அதிகாரிகளும் பலர் இதற்கு உடந்தையாக இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த மோசடி வழக்கில் அன்னபிரகாஷ், நில அளவையர் பிச்சைமணி, பெரியகுளம் தாலுகா அலுவலக தற்காலிக பணியாளர் ராஜ்குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இவர்களை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings