குடிமகன்களின் பிடியில் தவிக்கும் தேனி தாலுகா அலுவலக வளாகம்

குடிமகன்களின் பிடியில் தவிக்கும் தேனி தாலுகா அலுவலக வளாகம்
X

பைல் படம்

தேனி தாலுகா அலுவலக வளாகம் குடிமகன்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.

தேனி தாலுகா அலுவலகப்பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பகல் 12 மணிக்கு வியாபாரம் தொடங்கினாலும், ஸ்நாக்ஸ் (மாட்டுக்கறி, சிக்கன், எலும்பு, ஆட்டுக்கறி, ரத்தபொறியல், முட்டை இதர ஸ்நாக்ஸ்) விற்பனை செய்யும் கடைகள் பகல் 11 மணிக்கே வியாபாரத்தை தொடங்கி விடுகின்றன.

பகல் 11 மணிக்கு தொடங்கும் வியாபாரம் இரவு 11 மணி வரை தொடர்கிறது. இதனால் உழவர்சந்தை விவசாயிகள் பகல் 10 மணிக்குள் வியாபாரத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறி விடுகின்றனர். தாலுகா அலுவலகம் செல்ல விரும்புபவர்கள், இயற்கை இடர்பாடுகளை கழிக்க கூட எந்த வகையிலும் செல்ல வழியில்லை.

இங்குள்ள மீறுசமுத்திரம் கண்மாய் கரை பாதையினை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். குடிமகன்களின் தொல்லையால் இவர்களுக்கும் பெரிய அளவில் இடையூறுகள் ஏற்படுகிறது. விவசாய பணிகளை முடித்து விட்டு பெண்கள் வீடு திரும்ப முடியவில்லை. இதனை எல்லாம் விட மிகப்பெரிய கொடுமை, மீறுசமுத்திரம் கண்மாய் கரையினை ஒட்டி உள்ள ரோட்டில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பகல் நேரங்களில் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இரவில் இவர்களின் துயரத்தை சொல்லவே முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு குடிமகன்களின் தொல்லைகளை போலீசார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். இப்போது குடிமகன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil