தேனி : கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்த ஆர்வம்

தேனி : கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்த ஆர்வம்
X

பைல் படம்.

கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டவில்லை. தற்போது பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 671 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாம்களில் முதல் டோஸ் தடுப்பூசியினை 659 பேர் செலுத்திக் கொண்டனர். இரண்டாம் டோஸ் தடுப்பூசியினை 19 ஆயிரத்து 822 பேர் செலுத்திக் கொண்டனர். 175 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்