தேனி: கடந்த ஒரு வாரத்தில் மழை வெள்ளத்திற்கு ஆறு பேர் உயிரிழப்பு

தேனி: கடந்த ஒரு வாரத்தில்  மழை வெள்ளத்திற்கு  ஆறு பேர் உயிரிழப்பு
X

போடி கொட்டகுடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைப்பிள்ளையார் கோயில் அணை.

பலத்த மழையால் முல்லை பெரியாறு, வைகை, வராகநதி, கொட்டகுடி ஆறு, சண்முகாநதி, சுருளிஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

தேனி மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒரு வாரத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் முல்லை பெரியாறு, வைகை ஆறு, வராகநதி, கொட்டகுடி ஆறு, சண்முகாநதி, சுருளிஆறுகளில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகள், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலும், கடந்த ஒரு வாரத்தில் கம்பத்தில் ஒருவர், சின்னமனுாரில் இருவர், போடியில் ஒருவர், பெரியகுளத்தில் இருவர் என ஆறுபேர் இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். நீர் நிலைகளில் இறங்க கூடாது என மாவட்ட நிர்வாகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

Tags

Next Story