தேனி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

தேனி சமயபுரம் மாரியம்மன் கோயில்  சித்திரை திருவிழா
X

தேனி சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்கோயில் விழாவிற்கு வந்த இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகளை கோயில் விழாக்குழு நிர்வாகிகள்  வரவேற்றனர்.

தேனி ஓடைத்தெருவில் உள்ள சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் பூஜைகள் நடைபெற்றன.

தேனி ஓடைத்தெருவில் உள்ள சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயில் சி்த்திரை திருவிழா நடந்து வருகிறது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும், அன்னதானம் நடத்தியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். தினமும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இன்று காலை தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் ராமராஜ், கோவிந்தராஜ், தர்மராஜ், ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். இவர்களை கோயில் விழாக்குழு பொறுப்பாளர்கள் தங்கபாண்டியன், தங்கராமன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். கோயிலில் வழிபாடு நடத்திய இக்குழுவினர் பின்னர் மக்களுக்கு கோயிலின் வழிபாட்டு முறைகள், அதன் சிறப்புகள் குறித்து விளக்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!