தேனி சமதர்மபுரம் காமராஜர் பூங்காவை புதுப்பிக்க நாடார் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு நாடார் சங்க தேனி மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியாவிடம் மனு கொடுத்தார்.
New Park - தேனி காமராஜர் பூங்கா சமதர்மபுரத்தில் அமைந்துள்ளது. இந்த பூங்காவை சுற்றிலும் மீன் கடைகள், டீக்கடைகள் என வணிக நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக மீன் கடைகள் சுத்தம் இல்லாமல் இருப்பதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பூங்காவின் ஒரு பகுதியினை சிறுநீர் கழிப்பிடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பூங்கா முழுக்க திறந்தவெளியாக இருப்பதால், இரவு நேரத்தில் மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் மற்றும் இதர சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன.
இங்குள்ள காமராஜர் பெயர்பலகை பெயர்ந்து காணப்படுகிறது. இந்த பூங்காவை புதுப்பித்து, காமராஜர் பெயர்பலகையினை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இச்சங்க தேனி மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ் நாடார், மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட துணைத்தலைவர் தாஸ்நாடார் உட்பட நிர்வாகிகள் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியாவை சந்தித்து மனு கொடுத்தனர். தலைவர் ரேணுப்பிரியா இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu