தேனி மாவட்டத்தில் மூலிகை செடிகள் அபார வளர்ச்சி, பெண்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் மூலிகை செடிகள் அபார வளர்ச்சி, பெண்கள் மகிழ்ச்சி
X

தேனி மாவட்டத்தில் வெயிலில் உலர்த்தப்படும் மூலிகை செடிகள்.

தேனி மாவட்டத்தில் மூலிகை பறிப்பு பணிகள் மும்முரமாக நடப்பதால், கிராம பெண்களுக்கு வேலை வாய்ப்பும், வருவாயும் கிடைத்து வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்து வரும் நல்ல மழையால் பல்வேறு இடங்களிலும் மூலிகை விளைச்சல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஆண்டிபட்டி, பெரியகுளம், சின்னமனுார் ஒன்றியங்களில் அரசு மற்றும் தனியார் தரிசு நிலங்கள், மலையடிவாரங்களில் மூலிகைகள் செழித்து வளர்ந்துள்ளன.

இப்பகுதி கிராமங்களில் வசிக்கும் பெண்கள் குண்டுமுத்து, நெறிஞ்சிமுள், சாரத்திவேர், துளசி, கீழாநெல்லி உள்ளிட்ட பல்வேறு வகை மூலிகைகளை பறித்து கொண்டு வந்து கிராமங்களில் தங்கள் வீடுகளின் முன்பாக உலர வைத்து ஒன்று சேர்க்கின்றனர்.

குறிப்பிட்ட அளவு மூலிகை சேர்ந்த உடன் அவற்றை மொத்த வியாபாரிகளுக்கு விற்கின்றனர். மொத்த வியாபாரிகள் வாங்கிக்கொண்டு உடனடியாக பணமும் தருகின்றனர். இதனால் கிராமத்து பெண்களுக்கு வேலை வாய்ப்பும், வருவாயும் அதிகரித்துள்ளது.

Tags

Next Story
ai solutions for small business