தேனி என்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

தேனி என்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில்  முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு
X

தேனி என்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஹெர்மன்ஹட்ஸ் பேசினார்.

Welcome Speech for New students in College -தேனி என்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Welcome Speech for New students in College - தேனி என்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் டி.ராஜ்மோகன் அண்ணாச்சி தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் பி.பி.கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் எம்.பழனியப்பன், கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர் செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கே.கே.ஜெயராம்நாடார், ஜீவகன், கண்ணாயிரம், தர்மராஜன், சேகர், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கல்லுாரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அஜய்ரத்தினம், பிரபாகரன், ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர். லீடர் சாய்ஸ் வெல்னஸ் டிரெய்னிங் டெவலப்மெண்ட் இயக்குனரும் தன்னம்பிக்கை பேச்சாளருமான ஹெர்மென் ஹட்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அப்போது, பெற்றோர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இலக்கினை அடைவதில் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் உங்கள் வாழ்வின் ஏணிப்படிகள் தான். நல்ல நண்பர்கள் உங்களுக்கு மிகவும் அவசியம். பன்மொழிப்புலமை மிகவும் அவசியம். அலைபேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் ஹெர்மென் ஹட்ஸ் பேசினார். தமிழ்துறை தலைவர் தேவகி வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் சுசிலாசங்கர் நன்றி கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு