Theni news today-விழுந்து உடைந்த தக்காளி விலை..! கிலோ ரூ.10க்கும் கீழே வந்தது..!

Theni news today-விழுந்து உடைந்த தக்காளி விலை..! கிலோ ரூ.10க்கும் கீழே வந்தது..!
X

Theni news today-வெங்காய பண்டறை 

என்னடா இந்த தக்காளிக்கு வந்த சோதனை..? பறந்தால் விண்ணுக்குப்பாய்கிறது. விழுந்தால் உடைந்து சிதறுகிறது.

Theni news today

கடந்த மாதங்களில் தக்காளி பற்றிய செய்தி தினமும் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருந்தது. அந்த அவளுக்கு தக்காளி விலை பி.எஸ்.எல்.வி ராக்கெட் போல சீறிப்பாய்ந்து. ஆனால் இப்போது பாவம் தக்காளி. ரூ.10க்கு கீழே வந்துவிட்டது.

இதில் பாவப்பட்டது தக்காளி மட்டுமல்ல, அதை விளைவிக்கும் விவசாயிகளும்தான். கடன, உடன வாங்கி விவசாயம் செய்தால் ஒன்னு மழை அடிச்சி தண்ணியில போக வைக்கும். இல்லைன்னா வெயில் வட்டி காயவைக்கும். விளைந்தால் விலை இல்லாமல் நோகடிக்கும். இதுதான் இன்றைய விவசாயியின் நிலை.

இதில இன்னும் கொடுமை என்னன்னா, நடுவில வாங்கி விக்கிற இடைத்தரகர் சம்பாதிச்சிடுறாங்க. ஆனா, பாடுபட்டு உழைத்த பாவப்பட்ட விவசாயிக்கு ஒன்னும் இல்லாம போயிடுது.

Theni news today

விவசாய பொருட்களுக்கு விவசாயியே விலை நிர்ணயம் செய்யும் காலம் வந்தால் மட்டுமே அவர்கள் பிழைத்துக் கிடப்பார்கள்.

அப்படி கிலோ ரூ.200க்கு விற்ற தக்காளி இன்று கிலோ ரூ.10க்கும் கீழே வந்துவிட்டது. சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய். தேனி மார்க்கெட்டில் தக்காளி, சின்னவெங்காயம் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மார்க்கெட்டில் கடந்த மூன்று மாதங்களாகவே சின்னவெங்காயம், தக்காளி விலை வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. ஆவணி பிறந்ததும் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக ஆவணி பிறந்த பின்னரும் விலை வீழ்ச்சி தொடர்கிறது. தற்போதைய நிலையில் தக்காளி கிலோ 5 ரூபாய்க்கும் குறைவாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

சின்னவெங்காயம் கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். தக்காளியை இருப்பு வைக்க முடியாததால் விவசாயிகள் வேறு வழியின்றி வந்தவரை வரவு என நினைத்து விற்று விடுகின்றனர்.

சின்னவெங்காயத்தை பண்டறை போட்டு இருப்பு வைக்கின்றனர்.

Theni news today

சிறிய அளவில் பண்டறை அமைக்க 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் ஒருமுறை பண்டறை அமைத்தால், எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். தற்போதைய நிலையில் விதை வெங்காயம், உழவு,நடவு, 4 முறை களையெடுப்பு, 4 முறை மருந்துதெளிப்பு, வெங்காயம் அறுவடை உள்ளிட்ட செலவுகளை கணக்கில் கொண்டால் கிலோ 30 ரூபாய்க்கு விற்றால் விவசாயிகளுக்கு அசல் தேறும். அதற்கு மேல் விற்றால் மட்டுமே லாபம் வரும்.

Theni news today

தற்போது சின்ன வெங்காயம் கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் சின்னவெங்காயத்தை பண்டறைகளில் இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர்.

அறுவடையான சின்ன வெங்காயத்தை மண் இல்லாமல் உலர்த்தி, பதப்படுத்தப்பட்ட நிலையில் பண்டறைகளில் வைத்தால் ஆறு மாதம் வரை கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக இருக்கும். இந்த காலத்தில் விலை எப்போது உயர்கிறதோ. அப்போது விற்பனை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
future ai robot technology