தேனி புதிய பஸ் நிலையத்தில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார்

தேனி புதிய பஸ் நிலையத்தில்  தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார்
X

தேனி புதிய பஸ் நிலையம் (பைல்படம்).

தேனி புதிய பஸ் நிலையத்தில் தரமற்ற குடிநீர் பாட்டில் விற்கப்படுவதாக பயணிகள் புகார் கூறி வருகிறார்கள்.

தேனி புதிய பஸ் நிலையத்தில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களின் தரம் மிகவும் குறைவாகவே உள்ளது. இங்கு பழைய பாட்டில்களை சேகரித்து, நகராட்சி குடிநீரை, அதுவும் கழிப்பறைக்கு செல்லும் குடிநீரை பிடித்து புதிய சீல் ஒட்டி, விற்பனை செய்வதாக புகார் கூறப்படுகிறது.

இதனால் அவசரத்தில் 20 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. யாராவது குடிநீரின் தரம் பற்றி கேட்டால், அவர்களை அதோகதி ஆக்கி விடுகின்றனர். குறிப்பாக புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இதுபோன்ற நிலைமை உள்ளது.

உணவு பொருள் பாதுகாப்புத்துறை அரசியல் அழுத்தம் காரணமாக இந்த பகுதி கடைகளில் குடிநீர் உட்பட விற்பனை செய்யப்படும் எந்த பொருள் பற்றியும் ஆய்வு நடத்துவதில்லை. கலெக்டர் முரளீதரன் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture