தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் சிறப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது. நட்டாத்தி நாடார் மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் குமார் ஆனந்த் தலைமை வகித்தார். மகப்பேறு மருத்துவர் கோமதி வரவேற்றார். குழந்தைகள் நல மருத்துவர்கள் சாய் சந்தோஷ், முத்துப்பாண்டி, தீபிகா, ஜலீல், அருண் கார்த்திக், அறுவை சிகிச்சை மருத்துவர் கவிபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகப்பேறு சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் வனிதா ருக்மணி பேசும் போது, 'குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுத்து விட வேண்டும். தொடர்ந்து ஆறு மாதம் பிற உணவுகளை தவிர்க்க வேண்டும்' என்று கூறினார். குழந்தைகளுக்கு எந்த மாதிரியான நிலைகளில் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்றும் விரிவாக பேசினார். சிறப்பான முறையில் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்திய தாய்மார்களுக்கு பரிசுகளும், மிகச் சிறப்பான முறையில் தனது குழந்தையை பராமரித்து வருகின்ற ஸ்ரீமதி என்பவருக்கு விருதும் வழங்கி கவுரவித்தார். மருத்துவமனையின் செயலாளர் கமலக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
தாய்ப்பால் அதிகம் சுரக்க வைக்கும் சத்துள்ள உணவு வகைகள் குறித்த ஒரு விழிப்புணர்வு கண்காட்சியும் மாணவிகள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி சலீம் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் சாந்தி மற்றும் செவிலியர் கல்லூரி பிரின்சிபால் லாலி எபி ஆகியோர் செய்து இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu