தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 70 மாணவ, மாணவிகளுக்கு வேலை
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி பணி நியமனஆணை வழங்கினார்.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுாரியில் வேலை வாய்ப்பு பணி நியமன உத்தரவு வழங்கல், கல்வி வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் டி.ராஜ்மோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பி.பி.,கணேஷ், பொதுச் செயலாளர் எம்.எம்.ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லுாரி செயலாளர் ஏ.எஸ்.ஆர்.,மகேஷ்வரன் வாழ்த்து கூறினார். கல்லுாரி முதல்வர் மதளை சுந்தரம் வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் வேலை வாய்ப்பு அறிக்கை சமர்ப்பித்தார்.
பன்னாட்டு நிறுவனங்களான ஜோகோ, ஹெச்.சி.எல்., கேப்ஜமீன், டி.சி.எஸ்., டெக் மகேந்திரா, இன்போசிஸ், ஆட்டஸ் சின்டைல், வெப்ரக்ஸ், எல்.ஜி.பி., ஆகிய நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி ஒரே நாளில் 70 மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். இவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான பணி நியமன ஆணையினை மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.
மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டிய பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பேராசிரியர்களுக்கு கல்வி வழிகாட்டிக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்புத்துறை பேராசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu