தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி விளையாட்டு விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி விளையாட்டு விழா
X

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி விளையாட்டு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் குழு போட்டோ எடுத்துக் கொண்டனர்.

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 12வது விளையாட்டு விழா நடைபெற்றது.

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 12வது விளையாட்டு விழா நடைபெற்றது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் கே.பி.ஆர்., முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மதளை சுந்தரம் வாழ்த்தி பேசினார். ஒலிம்பிக் ஜோதியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் தேவஸ்தான செயலாளர் சந்திரசேகரன் ஏற்றி வைத்தார். தேசியக்கொடியினை கல்லுாரி கமிட்டி உறுப்பினர் நவீன்ராம் ஏற்றி வைத்தார். ஒலிம்பிக் கொடியை கல்லுாரி கமிட்டி உறுப்பினர் செல்வகுமார் ஏற்றி வைத்தார். கல்லுாரி கொடியினை கமிட்டி உறுப்பினர் ராஜ்குமார் ஏற்றி வைத்தார்.

இந்து நாடார் உறவின்முறை விளையாட்டுத்துறை செயலாளர் தர்மராஜன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். சென்னை இக்னைட் 101 உடற்பயிற்சி மையத்தின் இயக்குனர் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சுந்தர்ராஜன் விளையாட்டுத்துறை அறிக்கையினை வாசித்தார். 100 மீட்டர், 400 மீட்டர், தொடர் ஓட்டப்பந்தம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!