ஆசிரியை என்பதால் நம்பி வாக்களிப்போம்: தேனி தேர்தல்களத்தில் ருசிகரம்
வீடு, வீடாக சென்று இரட்டை இலைக்கு ஓட்டு கேட்ட பள்ளி ஆசிரியை ஷீலா.
தேனி நகராட்சி 29வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஷீலா. பள்ளி ஆசிரியையான இவர், இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கி உள்ளார். நேற்று இவர், ஓட்டு கேட்டு சென்ற போது, மக்கள் தங்களது குறைகளை சொல்லி வருத்தப்பட்டனர்.
அதனை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்த ஷீலா, இன்று முக்கிய பிரமுகர்களை வீடு, வீடாக சென்று சந்தித்தார். தனது தேர்தல் நடவடிக்கைகள், தான் வார்டில் செய்யப்போகும் பணிகள் குறித்து ஒவ்வொருவரிடமும் விளக்கி கூறி, ஆதரவு திரட்டினார்.
தங்களது வார்டில் ஆசிரியர் ஒருவர் களம் இறங்கியதால், அவரை முழுமையாக நம்பி தாங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க உள்ளதாக, வாக்காளர்கள், அ.தி.மு.க. வேட்பாளர் ஷீலாவிடம் உறுதி அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu