தெருத்தெருவாக கோலம் போடும் தேனி நகராட்சி... என்ன காரணம்?

தெருத்தெருவாக கோலம் போடும் தேனி நகராட்சி... என்ன காரணம்?
X

தேனி சமதர்மபுரம் ரோட்டில் பூமாரியம்மன் கோயில் எதிரே உள்ள சந்திப்பில் கோலமிடும் நகராட்சி பணியாளர்கள்.

பொதுமக்கள் தெருவில் குப்பை கொட்டுவதை தடுக்க குப்பைகள் கொட்டப்படும் இடங்களி்ல் தேனி நகராட்சி சுத்தம் செய்து கோலம் போட்டு வருகின்றனர்.

தேனி நகராட்சியில் துப்புரவுப்பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகளில் பெரும் தொய்வு காணப்படுகிறது. வீடுகளில் தினமும் குப்பை சேகரிக்கும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டு, ஒரு நாள், இரண்டு நாட்களுக்கு ஓருமுறை மட்டுமே குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. வணிக நிறுவனங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது.

இதனால் நகரின் முக்கிய தெருக்களில் பெருமளவு குப்பைகள் தேங்கி உள்ளன. மக்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை தெருவில் ஏதாவது ஒரு ஒதுக்குப்புறத்தில் கொட்டி விடுகின்றனர். இதனால் குப்பை கொட்டப்படும் பகுதியில் வசிப்பவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் தகராறுகள் கூட நடக்கின்றன. இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது.

தெருக்களில் சேரும் குப்பைகளை தினமும் அகற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குப்பைகளை அகற்றும் இடத்தில் மீண்டும் குப்பைகளை கொட்டாமல் தடுக்க அந்த இடத்தை கூட்டி, கழுவி, சுத்தம் செய்து கோலமிடுகின்றனர். கோலத்தை சுற்றிலும் குப்பைகளை கொட்டாதீர்கள் என எழுதி வருகின்றனர். ஓரிரு இடங்களில் மரக்கன்றுகளை கூட நடவு செய்து விட்டனர். நகராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்காவது பலன் கிடைக்கிறதா என பார்ப்போம் என அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!