தேனியில் பாஜகவினர் பேண்டு வாத்தியங்கள் முழங்க இறுதிகட்டப் பிரசாரம்

தேனியில்  பாஜகவினர் பேண்டு வாத்தியங்கள் முழங்க இறுதிகட்டப் பிரசாரம்
X

தேனி மாவட்ட பா.ஜ., தலைவர்கள் புடைசூழ ஓட்டு சேகரித்த தேனி நகராட்சி பதினைந்தாவது வார்டு வேட்பாளர் புவனேஸ்வரி.

தேனி நகராட்சி 15வது வார்டு பா.ஜ., வேட்பாளர் புவனேஸ்வரி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரித்தார்

இன்றுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தேனி நகராட்சி 15வது வார்டு பா.ஜ., வேட்பாளர் புவனேஸ்வரி தனது பலத்தை காட்டினார். பேண்டு வாத்தியங்கள் முழங்க, பா.ஜ.க கட்சி கொடி, சின்னங்களை ஏந்தி ஏராளமான தொண்டர்கள் பின்தொடர தனது வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.

பாஜக மாநில தேனி மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன், வர்த்தக அணி மாவட்ட அணி மாவட்ட தலைவர் சிவக்குமரன், மாவட்ட செயலாளர் கே.கே.ஜெயராமன் நாடார் (தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர்), பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீராச்சாமி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

வார்டின் அத்தனை தெருக்களிலும், அத்தனை வீடுகளிலும் இன்று பிரசாரக்குழு தனது தேர்தல் பிரச்சார வாக்குறுதி, தாமரை சின்னத்துடன் ஓட்டுப்பெட்டியில் தனது பெயர், வரிசை எண் அச்சிட்ட நோட்டீஸ்களை வழங்கி வாக்கு சேகரித்தார். பா.ஜ., சார்பில் பெண் வேட்பாளராக களம் இறங்கி உள்ள புவனேஸ்வரிக்கு மக்கள் மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தனது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ., தனது பலத்தை நிரூபித்துள்ளது என வாக்காளர்களை வியந்தனர்.

Tags

Next Story