தேனி நகராட்சி அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் முற்றுகை

தேனி நகராட்சி அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
X

தேனி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்.

தேனி நகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு தங்களது சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தேனி நகராட்சி அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதியை கடந்த பின்னரே முந்தைய மாதத்திற்குரிய சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாதம் 24ம் தேதியை கடந்தும் சம்பளம் வழங்கப்படவில்லை. நகராட்சி நிதிநிலை மோசமாக உள்ளது எனக்கூறும் நகராட்சி அதிகாரிகள், அவர்களுக்கு உரிய சம்பளத்தை மட்டும் உரிய காலத்தில் எடுத்துக்கொள்கின்றனர்.

துப்புரவு பணியாளர்களுக்கு மட்டும் நெருக்கடி நிலையை காரணம் காட்டி சம்பளம் வழங்காமல் தாமதம் செய்கின்றனர். அதிகாரிகளின் இந்த பாரபட்ச போக்கினை கண்டித்தும், சம்பளம் உடனே வழங்க வலியுறுத்தியும் இன்று பிற்பகல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நகராட்சி அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் சம்பளம் வழங்குவதாக உறுதி அளி்த்தனர். இதன் பின்னரே துப்புரவு பணியாளர்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!